ஷூட்டிங்கில் விபத்து.. நடிகர் அமிதாப் பச்சனுக்கு எலும்பு உடைந்ததால் பதறிப்போன படக்குழு- படப்பிடிப்பு நிறுத்தம்

Published : Mar 06, 2023, 10:38 AM ISTUpdated : Mar 06, 2023, 10:39 AM IST

புராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதில் நடித்தபோது அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது.

PREV
14
ஷூட்டிங்கில் விபத்து.. நடிகர் அமிதாப் பச்சனுக்கு எலும்பு உடைந்ததால் பதறிப்போன படக்குழு- படப்பிடிப்பு நிறுத்தம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு தற்போது 80 வயது ஆன போதிலும் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது புராஜெக்ட் கே என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார்.

24

புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இதில் அமிதாப் பச்சனும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இதில் அமிதாப் பச்சன் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்... Watch : மும்பையில் ராஜு பாய்... நியூ லுக்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் லேட்டஸ்ட் வீடியோ இதோ

34

இந்நிலையில், ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் விலா எலும்பு உடைந்ததாகவும், தசை கிழிந்து காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமிதாப் பச்சன் அதன் பின் வீடு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

44

வலி இருப்பதால் நடக்க கஷ்டமாக இருப்பதாகவும், இது குணமாக சில வாரங்கள் ஆகும் என்பதால் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக புராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய பிரபலம் - வைரலாகும் வீடியோ

Read more Photos on
click me!

Recommended Stories