தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன். சமீப காலமாக இவர் நடிப்பிலும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் திரையுலகில் நடிகராக எண்ட்ரி கொடுத்த செல்வராகவன். அடுத்தடுத்து சாணிக்காயிதம், நானே வருவேன், பகாசூரன் போன்ற படங்களில் நடித்த செல்வராகவனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதன்படி இயக்குனர் செல்வராகவன், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சிரஞ்சீவி என்கிற கேரக்டரில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் ரெட்ரோ லுக்கில் உள்ள புகைப்படமும் அந்த போஸ்டரில் இடம்பெற்று உள்ளது. சிரஞ்சீவி என தெலுங்கு சூப்பர்ஸ்டாரின் பெயருடன் களமிறங்கியுள்ள செல்வராகவன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது குணச்சித்திர வேடத்தில் வருகிறாரா என்கிற தகவலை படக்குழு வெளியிடவில்லை.