நயன்தாராவின் கோல்டு திரைப்படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்... தமிழ்நாட்டில் இன்று ரிலீசாகாது

First Published | Dec 1, 2022, 9:11 AM IST

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோல்டு திரைப்படம் இன்று தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான நேரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதையடுத்து அவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தான் நடிகை சாய் பல்லவி நடிகையாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசானது. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு படம் கூட ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், தற்போது அவர் கோல்டு என்கிற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஸ்டைலா... கெத்தாக அமர்ந்து... ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய படத்தை கண்டுகளித்த ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோஸ்

Tap to resize

கோல்டு திரைப்படம் இன்று தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இறுதியில் இன்று மலையாளத்தில் மட்டும் தான் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதன் தமிழ் வெர்ஷன் இன்று ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் சென்சார் தாமதம் ஆனதன் காரணமாக தான் தமிழில் கோல்டு திரைப்படம் இன்று ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாம்.

இதற்கு பதிலாக இப்படத்தின் தமிழ் வெர்ஷன் ஒரு நாள் தாமதமாக அதாவது நாளை (டிசம்பர் 2) திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோல்டு படத்தின் மலையாள வெர்ஷன் இன்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகி உள்ளது. டிரைலர், டீசர் என எந்தவித புரமோஷனும் இன்றி கோல்டு திரைப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் பரிசாக தந்த காரை திருப்பி கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப் - அதற்கு பதில் அவர் கேட்டது என்ன தெரியுமா?

Latest Videos

click me!