தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இந்த ஆண்டு இவரது இசையமைப்பில் இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின. இந்த அனைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.
அந்த வகையில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் லே மஸ்க் (Le Musk). வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இப்படத்தை அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டு பாராட்டுக்களை பெற்றார். இந்த படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இப்படத்தை விர்சுவல் ரியாலிட்டி முறையில் அவர் உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில், லே மஸ்க் திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டுக் காட்டி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் பாபா பட ரீ-ரிலீஸ் பணிகளுக்காக ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினிகாந்த், அவர் இயக்கிய லே மஸ்க் படத்தை கண்டு ரசித்துள்ளார். விர்சுவல் ரியாலிட்டி கிளாஸ் அணிந்து சேரில் ஸ்டைலாகவும், கெத்தாகவும் அமர்ந்தபடி ரஜினி அந்த படத்தை பார்த்த போது எடுத்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா? ராம் சரணின் RC 15 படத்திற்காக நியூசிலாந்து சென்று ஷங்கர் செய்த சிறப்பான சம்பவம்!