தயாரிப்பாளர் பரிசாக தந்த காரை திருப்பி கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப் - அதற்கு பதில் அவர் கேட்டது என்ன தெரியுமா?

First Published | Dec 1, 2022, 7:43 AM IST

கோமாளி பட வெற்றிக்கு பின் அவருக்கு தயாரிப்பாளர் பரிசாக கொடுத்த காரை, பிரதீப் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

love today

குறும்படங்களை இயக்கி அதன் மூலம் பட வாய்ப்பை பெற்றவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான லவ் டுடே திரைப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். பல வருடங்களாக கோமா நிலையில் இருந்த ஒருவர் அதிலிருந்து மீண்டு வரும்போது என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருந்தார் பிரதீப்.

கோமாளி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் தான் லவ் டுடே.

Tap to resize

இப்படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அதன் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ளார் பிரதீப். ரிலீசான முதல் நாளில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை இன்று தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று ரூ.100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது லவ் டுடே.

இதையும் படியுங்கள்... 'தங்கலான்' படத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுகிறாரா முன்னணி நடிகை? வெளியான அதிர்ச்சி தகவல்!

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்நிலையில், கோமாளி பட வெற்றிக்கு பின் அவருக்கு தயாரிப்பாளர் பரிசாக கொடுத்த காரை அவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கோமாளி படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அவருக்கு புது கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அந்த கார் இருந்தால் அதற்கு பெட்ரோல் போடவே நிறைய பணம் செலவாகும் என்பதால், அதனை திருப்பி கொடுத்து அந்த காருக்கான தொகையை தனக்கு பரிசாக கொடுத்தால், தான் அடுத்த படம் எடுக்கும் வரை அது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என கேட்டாராம் பிரதீப். அவர் கூறிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2-வில் ஜோதிகாவுக்கு பதில் இவரா..? சர்ச்சைக்குரிய நடிகையை சந்திரமுகியாக்கும் பி.வாசு!

Latest Videos

click me!