விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... அதிகம் டி.ஆர்.பி-யை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். சமையல் கலையில் நிபுணர்களாக இருக்கும், கின்னஸ் ரெகார்ட்டு வின்னர் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக உள்ளனர்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர், சீரியல் நடிகை ரித்திகா. இவர் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதே போல்... தற்போது பாக்கிய லட்சுமி தொடரில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.