இயக்குனர் பா.ரஞ்சித் கடைசியாக இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது 'பொன்னியின் செல்வன்' பட நாயகன் விக்ரமுடன் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்திற்காக மிகப்பெரிய தாடி மற்றும் மீசையுடன் விக்ரம், நடித்த கிலிப்ஸி வீடியோ ஒன்று சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் இந்த படத்தின் கிலிப்ஸி வீடியோவும் தீபாவளி தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'தங்கலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன், படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற போல் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றும், இதனால் இந்த படத்தில் இருந்து இவரை நீக்க பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.