தீபாவளி, பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாவது வழக்கம். அந்த வகையில் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளன. 9 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எகிறத் தொடங்கி உள்ளது.