பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசான இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் தயாரித்து இருந்தார். பான் இந்தியா படமாக ரிலீசான இப்படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனையும் நடிக்க வைத்து இருந்தனர். இதுதவிர நடிகை ரம்யா கிருஷ்ணனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
24
90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த லைகர் திரைப்படம், அதன் பட்ஜெட்டில் 30 சதவீதத்தை கூட வசூலிக்கவில்லை. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்த இப்படத்தால் நடிகர் விஜய் தேவரகொண்டா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர்களான பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து லைகர் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் விசாரணைக்கு ஆஜராகுமாரு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
44
இந்நிலையில், இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். லைகர் படம் படுதோல்வி அடைந்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்திற்காக ஹவாலா பணத்தை முதலீடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.