பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது விக்ரமன், ஷிவின், மற்றும் அசீம் ஆகிய மூன்று பேர் மட்டுமே வீட்டின் உள்ளே, உள்ள நிலையில் இவர்களில் யார் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பது நாளை தெறித்து விடும்.
பிக்பாஸ் டாஸ்க் ஒன்றின் போது, அசீம் விக்ரமனை பார்த்து மிரட்டும் தோனியின் அவர் என்னிடம் வர மாட்டார். என் அக்கா மகன் எம்.எல்.ஏ என கூறினார். எனவே யார் அந்த எம்.எல்.ஏ என கேள்வி எழுப்பிய நிலையில், ஆளூர் ஷாநிவாஸ் அசீம் கூறிய உறவு முறை கொண்ட அரசியல்வாதி என தெரியவந்தது.
இந்நிலையில் இது குறித்து ஆளூர் ஷாநிவாஸ் அசீம் குறித்து கூறியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அசீம் எங்கள் ஊர்க்காரர், அதே நேரத்தில் எனக்கு மிகவும் தெரிந்தவர், தூரத்து சொந்தமும் கூட ,ஆனால் அவர் கூறியது போல் அவர் என்னுடைய அக்கா மகன் கிடையாது. அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு அக்காவே இல்லை, ஒரு தங்கை மட்டுமே இருக்கிறார், அப்படி இருக்கும்போது அவர் எப்படி என்னுடைய அக்கா மகனாக இருக்க முடியும்’ என்று கூறியுள்ளார் .
செதுக்கி வைத்த சிலை போல்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அசர வைத்த மாளவிகா மோகனன்!
ஆனால் அதே நேரத்தில் விக்ரமன் குறித்து ஆளூர் ஷாநிவாஸ் கூறிய போது' இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை, அவ்வப்போது வெளியாகும் கிளிப்பிங் மட்டுமே பார்ப்பேன், விக்ரமன் என்னுடைய கட்சிக்காரர், நல்லவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில், ‘ கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம், கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம் என்ற தலைவர் திருமாவளவனின் வரிகளுக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க’ என்று பதிவு செய்துள்ளார்.