இந்த சூழலில் கங்குவா திரைப்படத்தின் வெளியிட்டுக்கு முன்னதாக அப்பாடக்குழு கங்குவா திரைப்படம் குறித்த பல விஷயங்களை பேசி இருந்தார்கள். குறிப்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "உலக அளவில் கங்குவா திரைப்படம் 2000 கோடி வரை வசூல் செய்யும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல நடிகர் சூர்யாவும், இந்த திரைப்படம் வெளியான பிறகு ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களும் வாயைப் பிளந்து இந்த திரைப்படத்தை பார்க்க உள்ளார்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால் படத்தில் சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருந்தாலும் கூட, திரைக்கதையின் தோய்வு திரைப்படத்தின் வெற்றியை மந்தமாக்கியது என்பது தான் ரசிகர்களின் பரவலான கருத்தாக இருந்து வருகிறது.