தங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை ஒளிர வைத்துள்ளார் தனது பேத்தி என்று, தாத்தா சிரஞ்சீவி மிக சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ராம்சரண் குடும்பத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி, தங்க தொட்டில் ஒன்றை ராம் சரண் மகளுக்கு பரிசாக அளித்த நிலையில், தங்கத்தால் ஆன ஒரு பொருளை தனது மருமகளுக்கு கொடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் அவர்கள். அல்லு அர்ஜுன் தனது மருமகளுக்கு, குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு தங்க சிலேட் ஒன்றை பரிசளித்துள்ளார். ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகாவுக்கே செம்ம டஃப்... கங்கனாவின் சந்திரமுகி லுக்கை வெளியிட்ட படக்குழு!