சூப்பர் ஹிட் படங்களை கூட, ஸ்கூப்பிங் செய்து காமெடியாக மாற்றி பல ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான் சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர். இந்த நிகழ்ச்சி பல காமெடி நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது.
இந்நிலையில் லொள்ளு சபா சாமிநாதன், 'மன்மதன்' படத்தில், சந்தானத்திற்கு சிம்பு வாய்ப்பு கொடுத்த போது அதனை வேண்டாம் என கவுண்டமணி தடுத்ததாக கூறியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது 'மன்மதன்' படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க சிம்பு முடிவு செய்ததற்கு, கவுண்டமணி அவரை திட்டியது மட்டுமின்றி "நாம எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். ஆனால் அதை இவனுங்க கிண்டல் பண்ணி வீடியோ போட்டுட்டு இருக்கானுங்க, அவனுகளுக்கு எதுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார்.
20 வருஷ பகையை மறந்து... பிரபலத்தின் சிகிச்சைக்கு உதவிய விக்ரம்! குவியும் பாராட்டு..!
ஆனால் சிம்புக்கு சந்தானத்தை மிகவும் பிடிக்கும் என்ற ஒரே காரணத்தாலும், அவரின் திறமை மீது உள்ள நம்பிக்கையாலும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, கவுண்டமணியின் காமெடி காட்சிகளை விட சந்தானத்தின் காட்சிகள் அதிகம் கவனிக்கப்பட்டது.
சந்தானம் 'மன்மதன்' படத்தின் மூலம் ஒரு காமெடியாக தன்னுடைய கேரியரை ஸ்டார்ட் செய்து இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அந்த வகையில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் தனக்கு ஏற்றாப்போல் கதைகளை தேர்வு செய்து பல படங்களில் நடித்தார். கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் வேட்டையாடி வருவது குறிப்பிடத்தக்கது.