Allu Arjun: 'புஷ்பா' ஸ்டார்... அல்லு அர்ஜுன் அடுத்த படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் பட இயக்குனர்..!

Published : Mar 03, 2023, 04:35 PM IST

நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2 'படத்தை தொடர்ந்து யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
15
Allu Arjun: 'புஷ்பா' ஸ்டார்... அல்லு அர்ஜுன் அடுத்த படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் பட இயக்குனர்..!

கடந்த 3 வருடங்களுக்கு மேலாக 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் வெளியாகி 373 கோடி வசூல் சாதனை படைத்தது.

25

இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். செம்மர கடத்தல் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்து வந்தது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய அடுத்த படத்திற்கு தற்போது தயாராகியுள்ளார்.

இந்திய சுதந்திரம் பற்றி சொல்லப்படாத கதை... கெளதம் கார்த்தியின் ‘ஆகஸ்ட் 16, 1947’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 

35

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்தியாவின் பவர்ஹவுஸ்களான தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஒரு மிகப்பெரிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. 
 

45

தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் இந்த மிகப்பிரம்மாண்டமான படத்தை முறையாக சாத்தியப்படுத்த சந்தித்தனர். 

ரம்யா பாண்டியனுக்கு ஏர்போர்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..! எதிர்பாராமல் நிகழ்ந்த பிரபலத்தின் சந்திப்பு!
 

55

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்க கூறிய கதை மிகவும் பிடித்து போகவே அல்லு அர்ஜுன், இப்படத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், அவரது 22 ஆவது படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories