தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் புஷ்பா. கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இதுதவிர இப்படத்திற்காக நடிகை சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் வேறலெவலில் ஹிட் ஆனதோடு, இன்றளவும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைவிட பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்தில் நடிப்பதற்காக ரூ.45 கோடி சம்பளமாக வாங்கிய அவர், அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி விட்டாராம். அதன்படி புஷ்பா 2-விற்காக அவர் ரூ.85 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.