அடுத்த அதிரடிக்கு தயாரான சூரரை போற்று..இந்தமுறை சூர்யாவுக்கு பதில் அக்ஷய்குமாராம்?

Kanmani P   | Asianet News
Published : Jan 29, 2022, 02:38 PM IST

சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற சூரரை போற்று படத்தை இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

PREV
18
அடுத்த அதிரடிக்கு தயாரான சூரரை போற்று..இந்தமுறை சூர்யாவுக்கு பதில் அக்ஷய்குமாராம்?
soorarai pottru

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’ (soorarai pottru). 

28
soorarai pottru

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா (Suriya), அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம், கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது

38
soorarai pottru

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஒருவேளை இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்திருக்கும் என திரைப்பட விமர்சகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர்

48
soorarai pottru

தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  தமிழக திரையரங்க உரிமையாளர்களோ ஓடிடி-யில் வெளியான படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர். 

58
soorarai pottru

இந்த படத்தை வெளியிட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தாலும், கேரள திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட முன்வந்தனர்.

68
soorarai pottru

சூர்யாவின் முந்தைய படமான சூரரைப் போற்று படத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இந்தப் படம் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இந்திய படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

78
soorarai pottru

அதோடு காட்டுப் பயலே பாடல் யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது . ஜீ.வி.பிரகாஷ் இசையில்உருவான இந்தப்பாடலுக்கான வரிகளை சினேகன் எழுத தீ(Dhee) இந்த பாடலை பாடியிருந்தார்..

88
soorarai pottru

இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ள  சூரரை போற்று படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது..

Read more Photos on
click me!

Recommended Stories