இயக்குனர் ஹெச் வினோத்தின் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஏகே 62 இயக்குனர் இவர் தான் என அறிமுகப்படுத்தப்பட்டு, பின் மாற்றப்பட்டு இவர் தான் என அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்காமல் இருக்கிறது. இயக்குனரை முடிவு செய்வதில் இருந்த குளறுபடி தான் காரணம் என சொல்லப்படுகிறது.
ஏகே 62 படத்திற்கு முதலில் இயக்குனராக அறிவிக்கப்பட்ட விக்னேஷ் சிவன் பின்னர், மாற்றப்பட்டு மகிழ்திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் இன்னும் தயாரிப்பு நிறுவனம் படம் சம்பந்தமான எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களும் ஏகே62-ல் என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.
விக்னேஷ்சிவனைத் தொடர்ந்து வந்த மகிழ்த்திருமேனி தற்போது அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம் மாட்டிக் கொண்டு மத்தளம் போல் ரெண்டு பக்கமும் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறாராம். ஒரு பக்கம் அஜித் கதையில் கூறும் சிறு மாற்றங்கள் மறுபக்கம் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்ற லைக்கா கொடுக்கும் அழுத்தம் என மகிழ்திருமேனி குழப்பத்தில் உள்ளார்.