உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரும் அஜித் - வைரலாகும் ஏகே-வின் டூர் போட்டோஸ் மற்றும் வீடியோ

First Published | Feb 17, 2023, 7:40 AM IST

நடிகர் அஜித்தின் சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படத்தின் பணிகள் தாமதம் ஆவதால், அவர் கடந்த மாதம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றார். முதலில் லண்டனுக்கு சென்ற அஜித், அங்கு ஏகே 62 படத்தின் இயக்குனர் தேர்வை முடித்துவிட்டு, பின் போர்ச்சுகல், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெளிநாடாக இருந்தாலும் அங்கும் அஜித்தை தேடிப்பிடித்து ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆன வண்ணம் இருந்தன.

தனது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ரிலீஸ் ஆவதை விரும்பாதவர் நடிகர் அஜித், இதனால் முன்பெல்லாம் அவரது சுற்றுலா புகைப்படங்கள் வெளியாவது அபூர்வமான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் எங்கு சென்றாலும் அவரின் புகைப்படங்கள் வெளியாகிவிடுகின்றன. குறிப்பாக தினசரி அஜித்தின் போட்டோக்களோ அல்லது வீடியோக்களோ வெளியாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து விடுகின்றன.

இதையும் படியுங்கள்... வெளிநாட்டில் ஜாலியாக கார் ஓட்டும் நடிகர் அஜித்தின் மாஸ் வீடியோ இதோ

Tap to resize

அந்த வகையில் சமீபத்தில் அஜித் வெளிநாட்டு சுற்றுலாவின் போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. வழக்கமாக பைக் ரைடிங் செய்யும் அஜித், இந்தமுறை வெளிநாட்டில் காரில் வலம் வந்துள்ளார். அப்போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி அஜித் சாலையோரம் அமர்ந்திருக்கும்படியான புகைப்படமும், அவர் காருக்கு டீசல் போடும் போது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தற்போது நடிகர் அஜித் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவிட்டார். இதனால் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 62 படத்தில் நடித்து முடித்த பின்னர், நடிகர் அஜித் பைக்கில் உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘ஏகே 62’ அப்டேட்டிற்காக ஆவலோடு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா நிறுவனம்

Latest Videos

click me!