பாக்ஸ் ஆபிஸில் பிரேக்டவுன் ஆன விடாமுயற்சி; 5ம் நாளில் சரசரவென குறைந்த வசூல்!

Published : Feb 11, 2025, 08:39 AM ISTUpdated : Feb 11, 2025, 09:06 AM IST

Vidaamuyarchi Box Office Collection Day 5 : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் 5ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
பாக்ஸ் ஆபிஸில் பிரேக்டவுன் ஆன விடாமுயற்சி; 5ம் நாளில் சரசரவென குறைந்த வசூல்!
அஜித்தின் விடாமுயற்சி

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. தடம், மீகாமன், தடையற தாக்க போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஏற்கனவே ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய இந்த ஜோடி தற்போது 5வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து உள்ளது.

24
ஆரவாரமின்றி ரிலீஸ் ஆன விடாமுயற்சி

விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்காததால் இப்படத்தின் ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனம் ரீமேக் உரிமைக்காக ரூ.150 கோடி கேட்டதால் ஆடிப்போன லைகா, பின்னர் அந்நிறுவனத்திடம் டீல் பேசி, 11 கோடி கொடுப்பது மட்டுமின்றி படத்தின் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி படத்தை கடந்த பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு கொண்டு வந்தது. முந்தைய அஜித் படங்களைக் காட்டிலும் விடாமுயற்சி படத்திற்கு புரமோஷனும் கம்மியாகவே செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்...விஜய்யின் கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய அஜித்தின் விடாமுயற்சி!

34
விமர்சன ரீதியாக சறுக்கிய விடாமுயற்சி

இதனால் ஆரவாரமின்றி ரிலீஸ் ஆன விடாமுயற்சி திரைப்படம் விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. ஏனெனில் இதில் அஜித்தின் மாஸ் காட்சிகளை நம்பி சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல், வித்தியாசமாக இருந்ததால் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன. பின்னர் பேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் பிடித்துப் போனதால் கடந்த வார இறுதியில் விடாமுயற்சி படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவிந்தது.

44
விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்

விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் ரூ.26 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.10.25 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.13.5 கோடியும், நான்காம் நாளில் 12.5 கோடியும் வசூலித்து இருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை வேலைநாள் என்பதால் இப்படத்தின் வசூல் மளமளவென சரிந்துள்ளது. அதன்படி ஐந்தாம் நாளில் விடாமுயற்சி திரைப்படம் வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. இந்த 5 நாட்களில் கம்மியான வசூல் இதுதான். இதுவரை இப்படம் உலகளவில் ரூ.112 கோடி வசூலித்துள்ளது. இன்று தைப்பூசம் அரசு விடுமுறை என்பதால் விடாமுயற்சி வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படம் பார்க்க போனா vicks,halls எடுத்துட்டு போங்க...ஸ்டன்ட் மாஸ்டர் சொன்ன மாஸ் தகவல்

click me!

Recommended Stories