
Good Bad Ugly Movie Twitter Review : அஜித்குமாரின் 63-வது படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜம் பணியாற்றி இருக்கிறார்.
குட் பேட் அக்லி ரிலீஸ்
குட் பேட் அக்லி திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி படம் சொதப்பியதால் குட் பேட் அக்லி படத்தை தான் ரசிகர்கள் மலைபோல் நம்பி இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில் டிரெய்லரும் இருந்ததால், படம் கன்பார்ம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில். இன்று உலகமெங்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள், படத்தின் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி முதல் சாவா வரை; இந்த வாரம் தியேட்டர் & OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா?
கதை இல்லை... ஓவர் பில்டப்
குட் பேட் அக்லி முழுக்க முழுக்க ஒரு மாஸ் என்டர்டெய்னர் படமாக வந்துள்ளது. இது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இது ரசிகர்களுக்காக அஜித் நடித்துள்ள படம். முதல் பாதி நன்றாக இருந்தது, இரண்டாம் பாதி ஒரு ஃப்ளாஷ்பேக் எபிசோடுடன் நன்றாகத் தொடங்கினாலும், அதன் பிறகு பெரிதாக எதுவும் இல்லை, இறுதி வரை இழுவையாக உணர வைக்கிறது. சில மாஸ் காட்சிகள் மிகவும் நன்றாக வந்துள்ளன, விண்டேஜ் அஜித்தாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இருப்பினும், படத்தில் கதை இல்லை. அதேபோல் எமோஷனல் கனெக்டும் அதிகம் இல்லை, பல வழக்கமான பில்ட்-அப் காட்சிகள் இருந்தாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சோர்வடையச் செய்யும்படி அமைந்துள்ளன. பின்னணி இசை பொருத்தமாக இருக்கிறது, ஆனால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். புரொடக்ஷன் வேல்யூ நன்றாக உள்ளன.
எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் இருந்தாலும், இது நிச்சயமாக சமீபத்திய அஜித் படங்களில் சிறந்த படமாக உள்ளது. மேலும் சில மாஸ் தருணங்களுக்கும், ஒரு விண்டேஜ் மாஸ் அஜித்தைப் காண்பதற்கும் இதை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.
ஆதிக்கின் ஃபேன் பாய் சம்பவம்
குட் பேட் அக்லி திரைப்படம் ஒரு பக்கா ஃபேன் பாய் சம்பவம். ஏகே அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளார். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் வேறலெவல். ஆதிக் ரவிச்சந்திரனின் சர்ப்ரைஸ் தருணங்கள் வேற லெவல், குறிப்பாக கிளைமாக்ஸில் ஏகேவின் லுக், அது ஒவ்வொரு ரசிகரின் கனவாக இருந்தது. தியேட்டரில் மிஸ் பண்ணிடாதீங்க என குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் சமீபத்திய சிறந்த படம்
ஆதிக் ரவிச்சந்திரனின் ஃபேன் பாய் சம்பவம் தான் குட் பேட் அக்லி. இது ஒரு மாஸ் எண்டர்டெயினர். சில இடங்களில் மிளிர்கிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டு உள்ளது. மாஸ் காட்சிகளில் அஜித்தை பார்க்க அருமையாக உள்ளது. அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அர்ஜுன் தாஸ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரின் நடிப்பும், டயலாக் டெலிவரியும் அருமை.
டெக்னிக்கலாக சிறந்த படம். பாடல்கள் அருமை, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை, படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. பாடல்கள் தியேட்டரில் பிளாஸ்டாக உள்ளன. இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் அருமையாக உள்ளன. முதல் பாதிக்கு பின் படம் அதே விறுவிறுப்போடு பயணிக்க தவறி உள்ளது. படத்தின் கதைக்களம் புதிதாக இல்லை. எமோஷனல் கனெக்டும் இல்லை. மொத்தத்தில் நல்ல படம் என பதிவிட்டுள்ளார்.
அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே..
குட் பேட் அக்லி படத்தில் எனர்ஜிடிக் ஆன அஜித்தை பார்க்க முடிகிறது. இந்த படமே பில்டப்பு, ஸ்லோ மோஷன் வாக் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது. ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால் கதையும் இல்லை, எமோஷனும் இல்லை. ரசிகர்களுக்கு Good, நியூட்ரல் ஃபேன்ஸுக்கு Bad ஹேட்டர்ஸுக்கு Ugly, இது அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... விஜய் பட சாதனையை அடிச்சு தூக்கிய அஜித்; புது வரலாறு படைத்த குட் பேட் அக்லி!