இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல... அதற்குள் அஜித்தின் ‘ஏகே 62’ பட ஓடிடி உரிமையை தட்டிதூக்கிய பிரபல நிறுவனம்

First Published | Nov 28, 2022, 8:40 AM IST

தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள நடிகர் அஜித்தின் 62-வது படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள அவரின் 62-வது படத்தை நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... சமந்தாவை விவாகரத்து செய்த ஒரே வருடத்தில்... நடிகையுடன் டேட்டிங் செய்யும் நாக சைதன்யா! வைரலாகும் புகைப்படம்!

Tap to resize

இப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் ஆரம்பமாகாத நிலையில், அதற்கு ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள துணிவு படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிரிந்து சென்ற மனைவியுடன்... ஜோடியாக வந்து தியேட்டரில் படம் பார்த்த பாலா - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

Latest Videos

click me!