பிரிந்து சென்ற மனைவியுடன்... ஜோடியாக வந்து தியேட்டரில் படம் பார்த்த பாலா - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

Published : Nov 28, 2022, 07:43 AM IST

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற தனது இரண்டாவது மனைவி எலிசபெத் உடன் சேர்ந்து நடிகர் பாலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

PREV
13
பிரிந்து சென்ற மனைவியுடன்... ஜோடியாக வந்து தியேட்டரில் படம் பார்த்த பாலா - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

தமிழில் சிறுத்தை, வீரம், விஸ்வாசம் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. இவரின் சகோதரர் பாலா, மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார். இவர் தமிழிலும் காதல் கிசுகிசு, அன்பு, வீரம், தம்பி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

23

நடிகர் பாலா கடந்த 2010-ம் ஆண்டு மலையாள பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகளும் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தது.

இதையும் படியுங்கள்... உதயநிதி பிறந்தநாள் ஸ்பெஷல்... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து மழை பொழிந்த மாமன்னன் படக்குழு

33

அம்ருதாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் எலிசபெத் என்கிற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் பாலா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நடிகர் பாலாவும் பேஸ்புக் நேரலையில் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அதோடு அந்த சமயத்தில் எலிசபெத்தை விமர்சித்தவர்களை தயவு செய்து விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட பாலா, அவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடுப்போம் என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற எலிசபெத் உடன் சேர்ந்து ஜோடியாக நடிகர் பாலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 3 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடிகர் பாலா நடித்த படம் தியேட்டரில் ரிலீசாகி உள்ளதால், அதனை அவருடன் சேர்ந்து பார்த்துள்ளார் எலிசபெத்.

இதையும் படியுங்கள்... காதலே காதலே தனிப்பெரும் துணையே..! காதல் மனைவி ஷாலினியுடன் வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் அஜித் - வைரல் Photo

click me!

Recommended Stories