காதலே காதலே தனிப்பெரும் துணையே..! காதல் மனைவி ஷாலினியுடன் வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் அஜித் - வைரல் Photo

First Published | Nov 27, 2022, 5:13 PM IST

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 12-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்சிகா... குடித்துவிட்டு தோழிகளுடன் அலப்பறை செய்யும் வீடியோ வைரல்

Tap to resize

இவ்வாறு தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதும், நண்பர்களுடன் பைக் டிரிப் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் அஜித். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார்.

ஷாலினி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம்

அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் தனது மனைவியை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்து உள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி, இந்த புகைப்படத்தை பதிவிட்டு ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டு இருக்கிறார். ஷாலினி பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு விறுவிறுவென லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... அஜித் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோ உடன் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த ஷாலினி - அதற்குள் இத்தனை பாலோவர்களா.!

Latest Videos

click me!