நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் ஒரு சிலை முன் மரியாதை செலுத்தியபோது கண்ணீர் சிந்தி உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸின் மீதும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் கார் ரேஸில் பங்கேற்று பல்வேறு விபத்துகளில் சிக்கியதால் அப்போது அவரின் பிலிம் கெரியர் பாதித்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸ் பக்கமே செல்லாமல் நடிப்பின் மீது மட்டும் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார் நடிகர் அஜித்குமார்.
24
மீண்டும் கார் ரேஸில் பிசியான அஜித்
கடந்த ஆண்டு முதல் நடிகர் அஜித், கார் ரேஸில் களமிறங்க முடிவெடுத்து, அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார். கார் ரேஸில் பங்கேற்க உடற்தகுதி முக்கியம் என்பதால், கடந்த 8 மாதங்களில் கடுமையாக உடற்பயிற்சி செய்து சுமார் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் அஜித். இதையடுத்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் தன்னுடைய அணியுடன் களமிறங்கினார் அஜித். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்தின் அணி 3ம் இடம் பிடித்து அசத்தியது.
34
கார் ரேஸில் வெற்றிகளை குவிக்கும் அஜித்
இதையடுத்து ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் களமிறங்கிய அஜித், அங்கும் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். இப்படம் கார் ரேஸில் களமிறங்கிய சில மாதங்களிலேயே அடுத்தடுத்து மூன்று வெற்றியை ருசித்துள்ளார் அஜித். வருகிற நவம்பர் மாதம் வரை அடுத்தடுத்து கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இந்நிலையில், அஜித்குமார் ஒரு கார் ரேஸ் ஜாம்பவானின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
அஜித்குமார் ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு சிலை முன் மண்டியிட்டு அஞ்சலி செலுத்திவிட்டு, அந்த சிலையின் காலுக்கு முத்தமிடுகிறார் அஜித். அந்த சிலை அயர்டன் சென்னா என்கிற பாமுலா 1 கார் ரேஸ் ஜாம்பவானுடையது. இமாலோ சர்க்யூட்டில் நடைபெற்ற கார் ரேஸில் உயிரிழந்தவரும், 3 முறை ஃபார்முலா 1 ரேஸில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவருமான பிரேசில் நாட்டை சேர்ந்த அயர்டன் சென்னாவின் நினைவிடத்தில் தான் நடிகர் அஜித் குமார் அஞ்சலி செலுத்தினார்.