Pradeep Ranganathan Upcoming Movies : டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் அடுத்தடுத்த 2 படங்கள் வெளியாக இருப்பது இப்போது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
Pradeep Ranganathan Upcoming Movies : ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோக்கள் சினிமாவிற்கு வந்த புதிதில் வருடத்திற்கு ஒரு சில படங்களில் நடித்தாலும் அதன் பிறகு அவர்கள் வரிசையாக 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டார்கள். இது பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்தன. ஆனால், இன்று அவர்கள் வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர்.
28
பிரதீப் ரங்கநாதன் - ஒரே ஆண்டில் 3 படங்கள் ரிலீஸ்
இந்த நிலையில் தான் இப்போது அவர்களின் ஐடியாவை பாலோ பண்ணி இளம் நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் முதலில் ஒரு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இப்போது படங்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் அவர் ரிலீஸ் செய்யும் படங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
38
கோமாளி
கோமாளி படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் செய்திருப்பார். அதன் பிறகு தான் லவ் டுடே படம் மூலமாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்லலாம். அதற்கு உதாரணம் தான் லவ் டுடே மற்றும் டிராகன். கம்மி பட்ஜெட் அதிக லாபம் கொடுத்த படங்களில் ஒன்று லவ் டுடே.
இந்தப் படம் ரூ.100 கோடி வரையில் வசூல் கொடுத்தது. இந்தப் படத்தின் இயக்குநரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு டிராகன் படத்தில் நடித்தார். இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.
58
லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி
கிட்டத்தட்ட ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.152 கோடி வரையில் வசூல் கொடுத்தது. இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) மற்றும் டியூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் ஏதேனும் ஒரு படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த 2 படங்களுமே இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
68
இயக்குநர் விக்னேஷ் சிவன்
அதன்படி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐகே வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதே போன்று அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் டியூட் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
78
எல்ஐகே மற்றும் டியூட்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டியூட் ஆகிய 2 படங்கள் வெளியானால் இந்த ஆண்டு 3 படங்கள் வெளியாகியிருக்கும். இப்படி பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியாக இருக்கும் 2 படங்களும் வித்தியாசமான கதைகளை கொண்டிருந்தால் அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும். அப்படியில்லை என்றால் அது ரசிகர்களை சலிப்படையச் செய்யும்.
88
சிறந்த உதாரணமே விஜய் சேதுபதி
இதற்கு சிறந்த உதாரணமே விஜய் சேதுபதி. ஒவ்வொரு மாதமும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியில் முடிந்தன. அதே போன்று தான் இப்போது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பிலும் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த 2 படங்களுமே ஹிட் கொடுத்தால் அது பிரதீப் ரங்கநாதனுக்கு உற்சாகத்தை அளிக்கும். அதுமட்டுமின்றி ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.