தமிழ் திரையுலகில் புதிதாக மலர்ந்துள்ள காதல் ஜோடி தான் விஷால் - சாய் தன்ஷிகா. இவர்கள் இருவரின் காதல் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இருவரும் சர்ப்ரைஸாக தங்கள் காதலை அறிவித்துள்ளனர். சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஷாலும் சாய் தன்ஷிகாவும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். அந்த படத்தின் விழா கிட்டத்தட்ட விஷால் - சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்த விழா போல தான் இருந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு கூட இதை சொல்லி கலாய்த்து இருந்தார்.
24
விஷால் - சாய் தன்ஷிகா திருமணம் எப்போது?
விஷாலும் சாய் தன்ஷிகாவும், பல வருட நண்பர்களாக இருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தான் காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் 29ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நடிகர் விஷாலின் பிறந்தநாளும் கூட. பிறந்தநாளன்றே தன்னுடைய காதலியை கரம்பிடிக்க உள்ளார் விஷால். திருமணத்துக்கு பின்னரும் சாய் தன்ஷிகாவை சினிமாவில் நடிக்க வைப்பேன் என்றும் யோகிடா பட விழாவில் விஷால் கூறி இருந்தார்.
34
விஷால் - சாய் தன்ஷிகா காதல் கதை
விஷாலும் சாய் தன்ஷிகாவும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை பிறகு எப்படி இவர்கள் இடையே காதல் மலர்ந்தது என்று தானே யோசிக்கிறீர்கள். அதன்பின்னணியில் ஒரு சம்பவமும் ஒளிந்திருக்கிறது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு சாய் தன்ஷிகா நடித்த விழித்திரு பட புரமோஷன் நிகழ்ச்சியில் டி ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த விழாவில் சாய் தன்ஷிகா பேசுகையில் டி ராஜேந்தரின் பெயரை சொல்ல மறந்துவிடுவார். இதனை மேடையிலேயே சுட்டிக்காட்டில் சாய் தன்ஷிகாவை தன் பாணியில் கிண்டலடித்து பேசினார் டி.ஆர்.
டி.ராஜேந்தரின் பேச்சுக்கு பின் சாய் தன்ஷிகா அவரிடம் மன்னிப்பு கேட்டார். இருந்தபோதிலும் விடாமல் சாய் தன்ஷிகாவை அடுக்குமொழியில் கிண்டலடித்து பேசினார் டி.ஆர். இதனால் சாய் தன்ஷிகா மேடையிலேயே அழுதுவிட்டார். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தான் தன்ஷிகாவுக்கு ஆதரவாகவும், டி.ராஜேந்தரை எதிர்த்தும் விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டார். இதன்பின் நன்றி தெரிவிக்கும் விதமாக விஷாலை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் தன்ஷிகா. அதன்பின்னர் தான் இருவரும் நண்பர்களாகி இருக்கிறார்கள். அந்த நட்பு நாளடைவில் காதலாகி தற்போது திருமணம் வரை வந்துள்ளது. இப்படி தான் விஷால் தன்ஷிகா காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் டி.ஆர்.