இந்நிலையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி நடித்துள்ளதாக தகவல் கசிந்தன. ஏற்கனவே இந்த படத்தில் சியான் விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் , த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ் , பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் ஷாலினி மறு பிரவேசம் செய்வதாக சொல்லப்படுகிறது.
ஷாலினி விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பொன்னியின் செல்வன் படக்குழு...மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.