தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகராக இருக்கும் அஜித், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், மூன்றாவது முறையாக இணைந்து, 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக தற்போது படக்குழு, பாங்காங் சென்றுள்ளது.