பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் இன்று உலகம் முழுதும் திரை கண்டு ரசிகர்களின் வெகுவான பாராட்டுகளை பெற்று வருகிறது. மணிரத்தினத்தின் கனவுப்படமான இது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி உருவாகியுள்ளதாகும். இதில் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.