டான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகி விட்டது. கல்லூரி மாணவராக ரசிகர்களை மகிழ்வித்து இருந்த சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் மூலம் டோலிவூட்டிற்கு அறிமுகம் ஆகிறார் சிவகார்த்திகேயன்.