
Vidaamuyarchi Movie Loss Amount : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் எவ்வளவு நஷ்டம் அடைந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் அஜித் குமாரின் 62வது படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களை இம்பிரஸ் செய்ய தவறியதால், வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடிக்கு வந்தது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தால் ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு என்பதை வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ளார். அதன்படி விடாமுயற்சி திரைப்படம் ரூ.280 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாம். இதில் அஜித் உள்பட இதர நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் மட்டும் 140 கோடியாம். அதுபோக பட தயாரிப்புக்கு வெறும் 60 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அஜித்தின் சம்பளத்திற்காக வாங்கிய தொகையின் வட்டி மட்டும் 50 கோடியாம். மற்ற செலவுகளுக்காக வாங்கிய பணத்திற்கு ரூ.20 கோடி வட்டியாம்.
இதையும் படியுங்கள்... அஜித்தை மிஞ்சிய பிரதீப்; பாக்ஸ் ஆபிஸில் விடாமுயற்சியை ஓட ஓட விரட்டிய டிராகன்!
மொத்தம் வட்டி மட்டும் 70 கோடி ரூபாயாம். பின்னர் படத்தின் விளம்பரத்திற்காக 10 கோடி செல்விடப்பட்டுள்ளது. இதில் படத்தின் ரிலீசுக்கு முன்னர் நடந்த வியாபாரத்தின் வாயிலாக ரூ.156 கோடி கிடைத்ததாம். இதனால் எஞ்சியுள்ள 124 கோடியை தியேட்டர் வசூல் மூலம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனிடையே இப்படத்தை வெளிநாட்டில் லைகா நிறுவனமும், தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் ரிலீஸ் செய்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.81 கோடி வசூலித்து இருந்தது.
இதில் ரெட் ஜெயண்ட்டுக்கு கொடுக்க வேண்டிய ஷேர் 3.5 கோடி போக லைகா நிறுவனத்துக்கு ரூ.31.5 கோடி ஷேராக கிடைத்திருக்கிறது. இந்தியாவில் 97.5 கோடியும் வெளிநாடுகளில் 40 கோடியும் என மொத்தம் 137.5 கோடி வசூலித்திருந்தது விடாமுயற்சி. இதில் மொத்தமாக லைகாவுக்கு கிடைத்த ஷேர் தொகை மட்டும் ரூ.48 கோடியாம். இதில் விநியோகஸ்தர்களுக்கு 34 கோடி திருப்பி கொடுத்தது போக 14 கோடி ஷேர் மட்டுமே லைகா கையில் இருந்துள்ளது.
ரிலீசுக்கு முன்னரே 124 கோடி நஷ்டத்தில் தத்தளித்த லைகா நிறுவனம் விடாமுயற்சி மூலம் கிடைத்த ஷேர் தொகையை காட்டிலும் கூடுதலாக 3 கோடி சேர்த்து மொத்தமாக 17.5 கோடியை இப்படத்தின் ரீமேக் உரிமைக்காக பாராமவுண்ட் நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டதாம். இதனால் விடாமுயற்சி படம் மூலம் லைகாவுக்கு ரூ.127.5 கோடி நஷ்டமாம். இதன்மூலம் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக இந்த விடாமுயற்சி அமைந்துள்ளதாக பிஸ்மி கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Vijay Vs Ajith: வசூல் ரீதியாக தளபதியை தொட திண்டாடும் அஜித்; கடந்த 5 வருடத்தில் இதை நோட் பண்ணுனீங்களா?