Karthigai Deepam: மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி - சம்மதம் சொன்ன சாமுண்டீஸ்வரி; கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Mar 04, 2025, 11:39 AM IST

Karthigai Deepam: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடரில் தற்போது ரேவதியின் திருமண வைபோகம் நடந்து வரும் நிலையில், இன்று என்ன நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.  

PREV
15
Karthigai Deepam:  மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி - சம்மதம் சொன்ன சாமுண்டீஸ்வரி; கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9-பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் திருமணத்தை நிறுத்துவதற்காக, மகேஷை அருண் ரூமுக்குள் வைத்து அடைத்து வைத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

25
மகேஷை கண்டுபிடித்த மாயா

ஐயர் மாப்பிளைக்கு புது துணி கொடுக்கவேண்டும் என கூப்பிட, மகேஷ் ரூமுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் அவனால் வரமுடியாமல் போகிறது. மாப்பிள்ளையை காணும் என்கிற தகவல் வெளியே வர திருமண மண்டபமே பரபரப்பாகிறது. மாயா, மகேஷ் எங்கே என தேடி அலையும் நிலையில், மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் சோதனை செய்கிறாள். பின்னர் மகேஷை திறந்து விடுகிறாள்.  

Karthigai Deepam: மணமேடைக்கு வராத மகேஷ்; ரேவதி திருமணத்தில் நடக்க போகும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்!

35
மேடையேறும் கார்த்திக்

இங்கே மகேஷ் காணும் என்பதால், சாமுண்டீஸ்வரி கார்த்தியை மேடை ஏறவைக்க, கார்த்திக் பாட்டி கையால் புது துணியை வாங்கி கொள்கிறான். இந்த காட்சியை ரூமை விட்டு வெளியே வந்த மகேஷ் மற்றும்  மாயா பார்த்து கடுப்பாகிறார்கள். 

45
கார்த்திக் புது துணியை வாங்கி கொண்டதால் பரமேஸ்வரி பாட்டி மகிழ்ச்சியடைகிறாள்

அதே நேரம் தன்னுடைய ஆசைப்படி, கார்த்திக் புது துணியை வாங்கி கொண்டதால் பரமேஸ்வரி பாட்டி மகிழ்ச்சியடைகிறாள். திருமண மண்டத்தில், பாட்டு கச்சேரி நடப்பதை பார்த்து சுவாதி தானும் பாட வேண்டும் என ஆசைப்படுகிறாள். ஆனால் சாமுடீஸ்வரிக்கு இது தெரிந்தால் அவள் கோபம் கொள்வாள் என்பதால் தன்னுடைய ஆசையை சுவாதி வெளிப்படுத்தவில்லை.

Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டி சொன்ன வார்த்தை? கோபத்தில் சாமுண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்!

55
சுவாதி ஆசையை நிறைவேற்றிய ரேவதி

சுவாதியின் ஆசையை புரிந்து கொண்ட ரேவதி, நீ போய் பாடு என சொல்லி ஊக்கம் கொடுக்கிறாள். அம்மா திட்டுவாங்க என சுவாதி தயங்க அம்மாவிடம் நான் பேசி கொள்கிறேன் என்கிறாள். பின்னர் சாமுதீஸ்வரியிடம் சுவாதி என் திருமணத்தில் பாடவேண்டும் என ஆசையாக இருக்கிறது என சொல்ல, சாமுண்டீஸ்வரியும் சம்மதம் சொல்கிறாள்.

இதையடுத்து சுவாதி மேடை ஏறி கச்சேரியில் பாடுகிறாள். கலகலப்பாக ரேவதியின் திருமணம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories