விடாமுயற்சி ரிலீசான சில மணி நேரத்தில் இப்படியா ஆகணும்? படக்குழு தலையில் இடியை இறக்கிய விஷயம்!

Published : Feb 06, 2025, 12:22 PM IST

அஜித் குமார் மற்றும் த்ரிஷா நடித்த விடாமுயற்சி இன்று (பிப்ரவரி 6) வெளியானது. ஆனால், இந்த அதிரடிப் படம் வெளியான அன்றே திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியாகி உள்ளது.  

PREV
15
விடாமுயற்சி ரிலீசான சில மணி நேரத்தில் இப்படியா ஆகணும்? படக்குழு தலையில் இடியை இறக்கிய விஷயம்!
விடாமுயற்சி ஆன்லைனில் லீக்:

அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான நிலையில், இப்படம் வெளியான சில மணி நேரங்களில். சில அங்கீகரிக்கப்படாத இணையதளங்களில் திருட்டு தனமாக  செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது. இதனால், இணைய பயனர்கள் தங்கள் தொலைபேசிகள் அல்லது கணினிகளில் படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்க்க வாய்ப்புள்ளதால் இப்படத்தின் வசூல் குறையும் அபாயமும் ஏற்படுத்தியுள்ளது. 

25
வசூலை பாதிக்கும் அபாயம்

ஆன்லைனில் 'விடாமுயற்சி' படத்தின் HD, 1080p, 720p மற்றும் 480p போன்ற பல்வேறு தரங்களிலும் இப்படம் பார்க்கக் கிடைக்கிறது. திரையரங்குகளில் இன்று வெளியான போதிலும், விடாமுயற்சி வெளியான உடனேயே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி உள்ளது ஒட்டு மொத்த படக்குழுவின் தலையில் இடியை இறக்கி உள்ளது.
 

35
ஆன்லைனில் புது படங்கள் லீக் ஆவது தொடர்கதையாகி வருகிறது

திரைப்படங்கள் இப்படி ஆன்லைனில் கசிவது புதிதல்ல. விடாமுயற்சிக்கு முன்பு, கேம் சேஞ்சர், புஷ்பா 2, பொன்மான், பிரவீன் கூடு ஷாப்பு, தாக்கு மகாராஜ், பார்ரோஸ், சங்கராந்திக்கு வஸ்துனம் போன்ற படங்களும், இந்த ஆண்டு வெளியான படங்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. 
 

45
தரமான படங்களுக்கு வரவேற்புகள் குறைவதில்லை:

ஏற்கனவே திரைப்பட விமர்சகர்களின் எதிர்மறை விமர்சனங்கள் தான் படத்தின் வசூலை பாதிக்கிறது என, தயாரிப்பாளர்கள் தங்களின் கவலையை கூறி வந்த நிலையில், சில பாசிட்டிவ் விமர்சனங்களை பெரும் படங்கள், இப்படி ஆன்லைனில் லீக் ஆவது மூலம் வசூலில் சரிவை சந்திக்க நேர்கிறது.

அதே நேரம், தரமான படங்கள் என்றுமே திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சோடை போவது இல்லை என்பதையும் சில படங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான, அமரன் இந்த ஆண்டு வெளியான மதகஜராஜா போன்ற படங்கள், ஆன்லைனில் திருட்டு தனமாக வெளியானபோதும் வசூலில் சாதனை படைத்தது குறிபிடத்தக்கது.

55
ஆன்லைனில் படங்கள் வெளியிடப்படுவது குற்றச்செயல் ஆகும்

விடாமுயற்சி திரைப்படமும் வெளியானதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இப்படத்தின் வசூலை ஆன்லைன் பதிவு பாதிக்காது என்கிற நம்பிக்கை இருப்பதாக திரைப்பட உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மறுப்பு: Asianet News Tamil, திருட்டுத்தனத்தை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. 1957 ஆம் ஆண்டு பரிசுரிமைச் சட்டத்தின் கீழ் திருட்டு ஒரு குற்றமாகும்.
 

click me!

Recommended Stories