அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் கிரைம் திரில்லர் திரைப்படமான விடாமுயற்சி, பிப்ரவரி 6, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சார்ஜா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அரவ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
24
விடாமுயற்சி முதல் நாள் வசூல் நிலவரம்:
இந்நிலையில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கரான Sacnilk, விடாமுயற்சி திரைப்படம் அதன் முதல் நாளில் நல்ல வசூலை பெரும் என கணித்து கூறியுள்ளது. அதே போல் இந்திய அளவில் மட்டும் இப்படம் 25 கோடி வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம், வெளிநாடுகளில் ரூபாய் 14 கோடி வரை ப்ரீ புக்கிங்கில் வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் ப்ரீ புக்கிங் மூலம் விடாமுயற்சி ரூ.17 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின், ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின், "கதைக்களம் என்று பார்த்தால், சந்தோஷமான இரு ஜோடிகள் இடையே ஏற்படும் பிரச்சனை அவர்களை விவாகரத்து வரை கொண்டுவருகிறது. இருவரும் விவாகரத்து பெற தயாராகும் நிலையில், த்ரிஷா திடீர் என கடத்த படுகிறார். த்ரிஷாவை கண்டுபிடிக்க கணவர் முயலும் போது பல உண்மைகள் தெரியவருகிறது. ஏன் இந்த சம்பவங்கள் நடக்கிறது என... பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை மிகவும் நேர்த்தியாக இயக்கி உள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி".
44
விடாமுயற்சி படக்குழு:
அஜித்துடன் இணைந்து இந்த படத்தில், அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மேலும் NB ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். மிலன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளர். சுப்ரீம் சுந்தர் இந்த படத்திற்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.