குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா அடுத்ததாக ஹீரோயின் ரோலில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடித்திருந்த புகைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘வாசுவின் கர்ப்பிணிகள்’. இப்படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்கள் சர்ச்சையை கிளப்பியது. அந்த போஸ்டரில் நடிகைகள் வனிதா, அனிகா, சீதா உள்ளிட்ட நான்கு பெண்கள் கர்ப்பாமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வரும் அனிகா... வழக்கம் போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.