சர்ச்சை முடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாயகியுடன் சாமி தரிசனம் செய்த பார்த்திபன்

Published : Jul 19, 2022, 04:13 PM IST

தமிழ் சினிமாவிற்கும் சம்பந்தமில்லாத புது விதமான முயற்சியில் இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட் அடிப்படையில் எடுத்து உள்ளேன். அதில் எனக்கு வியாபார நோக்கம் இல்லை  கூறியுள்ளார் பார்த்திபன்.

PREV
14
சர்ச்சை முடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாயகியுடன் சாமி தரிசனம் செய்த பார்த்திபன்
iravin nizhal

இறுதியாக ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் உலக கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இந்த படத்தில் இவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். தேசிய விருதும் இந்த படத்திற்கு கிடைத்தது. ஹிந்தியில் ரீமேக் ஆகி வரும் இந்த படத்தில் அபிஷேக் பச்சன் பார்த்திபனுக்கு பதிலாக நடித்து வருகிறார். அதோடு விரைவில் ஹாலிவுட்டிலும் இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் பார்த்திபன்.

ஒத்த செருப்பு பாடத்தை தொடர்ந்து தற்போது இரவில் நிழல் என்னும் புதுமையான திட்டத்தை தன் கையில் எடுத்து திரையில் பிரதிபலிக்க வைத்துள்ளார் பார்த்திபன். நான் லீனர் சிங்கிள் ஷாட் என பாராட்டப்படும் இந்த படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் என போராட்டப்படுகிறது.

24
iravin nizhal

 சுமார் 300-க்கும் மேற்பட்ட குழுவுடன் சிங்கிள் ஷாட் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர். இந்த படத்தை பார்த்திபன் தயாரித்து இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.70 ஏக்கர் நிலப்பரப்பில் 50க்கும் மேற்பட்ட செட்டுகள் அமைத்து ஒரே நேரத்தில் இது படம் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அச்சசோ.. சமந்தாவை அலேக்காக தூக்கியா அக்‌ஷய் குமார்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ!

பார்த்திபன் பிரிகிடா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ஒருவரின் பிளாஷ்பேக் கதையாக உள்ளது. போலீஸ் வழக்கில் மாட்டிக் கொள்ளும் நாயகன் தப்பிப்பதற்காக ஒரு பாலடைந்த மண்டபத்தில் தஞ்சம் அடைகிறார். அப்போது தனக்கு முன்நாட்களில் நடந்த நிகழ்வுகளை முன்னும் பின்னும் ஆக யோசிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

34
iravin nizhal

ஜூலை 15-ம் தேதி வெளியாகி வெகுவான பாராட்டுகளை பெற்று வரும் இந்த படம். சர்ச்சையிலும் சிக்கியது. இதன் நாயகி பிரகிடா ஸ்லம் ஏரியாக்களில் வாழும் மக்கள் மோசமான வார்த்தைகள் பேசுவார்கள் எனக்கூறி சர்ச்சைகள் சிக்கிக்கொண்டார் இது குறித்து பலத்த எதிர்ப்பும் கிளம்புயாது.

மேலும் செய்திகளுக்கு...கொசு வலையில் தைத்த உடையில்.. பக்க கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..

பின்னர் பிரகிடாவிற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் ,ஸ்லமில் உள்ள மக்களை துன்புறுத்துவது தனது நோக்கம் அல்ல அங்கு உள்ளவர்களை ஹீரோ ஆக்குவது தான் தனது பணி என பார்த்திபனும், தெரியாமல் பேசி விட்டேன் மன்னித்து விடுங்கள் என பிரிகிடாவும் அடுத்தடுத்து மன்னிப்பு பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

44
iravin nizhal parthiban sami darshan at meenakshi temple

இந்நிலையில் பார்த்திபன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று காலை நடிகை பிரகிடாவுடன் கோயிலுக்கு சென்ற பார்த்திபன் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு படம் வெற்றி பெற அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ரயிலில் பாடிய பெண்ணை.. வலைபோட்டு தேடும் டி இமான் !

பின்னர் நிருபர்களிடம் பேசிய இவர், தமிழ் சினிமாவிற்கும் சம்பந்தமில்லாத புது விதமான முயற்சியில் இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட் அடிப்படையில் எடுத்து உள்ளேன். அதில் எனக்கு வியாபார நோக்கம் இல்லை. இரவில் படத்தை வெற்றி படமாக அனைவரும் நன்றி மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories