மேலும் சமீபத்திய ஹிட் வில்லனான விஜய் சேதுபதி புஷ்பா 2 வில் இடம் பெற்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. முந்தைய பாகத்தில் வனத்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்க படக்குழு கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் விஜய் சேதுபதி அந்த கதாபத்திரத்தை ஏற்க மறுத்ததால், இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு ரோலுக்கு படக்குழு விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. கொசு வலையில் தைத்த உடையில்.. பக்க கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..
இந்த படத்தின் புதிய அப்டேட்டாக பகத் பாசிலின் பேட்டி தான் தற்போது வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில் புஷ்பா பார்ட் 2 வில் நானும் இருக்கிறேன். இது மிகவும் நல்ல கதை. பாகம் மூன்றும் தயாராகும் என இயக்குனர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். அதோடு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் பகத் பாஸில் தெரிவித்துள்ளார். புஷ்பா 3 குறித்த இவரின் தகவல் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.