அழகிரி மகனுடன் அஜித்.. மீண்டும் உருவாகிறதா மங்காத்தா கூட்டணி..?

Kanmani P   | Asianet News
Published : May 27, 2022, 12:51 PM ISTUpdated : May 27, 2022, 01:03 PM IST

மங்காத்தா தயாரிப்பாளர் குடும்பத்துடன்  அஜித்குமார் மற்றும் ஷாலினி எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

PREV
14
அழகிரி மகனுடன் அஜித்.. மீண்டும் உருவாகிறதா மங்காத்தா கூட்டணி..?
ajith 61

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்திருந்தார். ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காலா பட நடிகை ஹீமா குரோஹி நாயகியாக நடித்திருந்தார். கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் நவசூலை ஓரளவு பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் அஜித் 61வது படம் தற்போது உருவாகி வருகிறது.

24
ajith 61

வங்கி கொள்ளை தொடர்பான இந்த கதைக்களத்தில் அஜித் கல்லூரி பேராசிரியராக வருவதாகவும். நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் மவுண்ட் ரோடு போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மவுண்ட் ரோடு செட்டை ஐதராபாத்தில் அமைத்தற்கு ஏக[ஏகப்பட்ட விமர்சங்கள் எழுத்து வருகிறது.

34
ajith 61

போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் அஜித்தின் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நிரவ் ஷா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இதில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு தீனா படத்திற்கு பிறகு தற்போது அஜித் 61-ல் மகாநதி சங்கர் இணைந்துள்ளதாக சமீபகாலமாக தகவல் பரவி வருகிறது.

44
ajith 61

இந்நிலையில் அஜித் தந்தது புதிய பட கெட்டப்புடன் இவரின் முந்தைய ஹிட்களில் ஒன்றான மங்காத்தா  படத்தை தயாரித்த தயா அழகிரி மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்த புகைப்படம் ஒன்று தற்போது மாஸ் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories