Aishwarya Rajinikanth : ராகவா லாரன்ஸுடன் சர்ப்ரைஸ் கூட்டணி அமைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... அப்போ சிம்பு?

Ganesh A   | Asianet News
Published : Mar 14, 2022, 08:34 AM IST

Aishwarya Rajinikanth : நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தனது அடுத்த புராஜெக்ட் குறித்த அறிவிப்பை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார். 

PREV
15
Aishwarya Rajinikanth : ராகவா லாரன்ஸுடன் சர்ப்ரைஸ் கூட்டணி அமைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... அப்போ சிம்பு?

3 மூலம் கிடைத்த அறிமுகம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசனும் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 

25

ஒய் திஸ் கொலவெறி ஹிட்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானது இந்த படத்தின் மூலம் தான். குறிப்பாக இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்கிற பாடல் ஓவர் நைட்டில் உலகளவில் வைரல் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

35

வை ராஜா வை தந்த வெற்றி

இதையடுத்து 3 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தும் நடித்திருந்தார். கேம்பிளிங்கை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் தனுஷ் கொக்கி குமாராக வந்து மாஸ்காட்டி இருந்தார்.

45

தனுஷுடன் விவாகரத்து

இப்படத்துக்கு பின் எந்த படங்களையும் இயக்காமல், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யா, குடும்பத்தை கவனித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ஐஸ்வர்யா. இந்த அறிவிப்புக்கு பின் மீண்டும் டைரக்‌ஷனில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் ஐஸ்வர்யா, சமீபத்தில் முசாபிர் என்கிற மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வெளியிட்டார். 

55

லாரன்ஸுடன் கூட்டணி

இதனிடையே நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தனது அடுத்த புராஜெக்ட் குறித்த அறிவிப்பை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகப்போவது படமா? அல்லது மியூசிக் வீடியோவா? என்பதை அவர் அறிவிக்கவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள், அப்போ சிம்பு படம் என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... The Legend Movie : லெஜண்ட் சரவணன் படத்தில் ஐட்டம் சாங்! குத்தாட்டம் போட அஜித் பட நடிகையை களமிறக்கிய அண்ணாச்சி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories