The Legend Movie : லெஜண்ட் சரவணன் படத்தில் ஐட்டம் சாங்! குத்தாட்டம் போட அஜித் பட நடிகையை களமிறக்கிய அண்ணாச்சி

First Published | Mar 14, 2022, 5:36 AM IST

The Legend Movie : ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். 

டிரெண்ட் செட்டர் ஆன அண்ணாச்சி

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது கடைக்கான விளம்பரங்களில் நடித்தார். ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் அவர் ஜோடி போட்டு நடித்ததை பார்த்து கோலிவுட்டே வியந்தது. இவர் ஒரு டிரெண்ட் செட்டர் என்றும் கூட சொல்லலாம். ஏனெனில் இவரைப் பார்த்து தான் விளம்பரங்களில் பல நிறுவனங்களின் முதலாளிகள் நடிக்க தொடங்கினர்.

சினிமாவில் எண்ட்ரி

விளம்பரங்களில் அசத்தி வந்த அண்ணாச்சி, இப்போ சினிமாவிலும் கால் பதித்து விட்டார். அவர் நடிக்கும் முதல் படம் ‘தி லெஜண்ட்’. இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இப்படத்தை இயக்குகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கி உள்ளனர். 

Tap to resize

பாலிவுட் நடிகையுடன் ரொமான்ஸ்

இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் பிரபு, ரோபோ சங்கர், விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பர்ஸ்ட் லுக் வைரல்

இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் லெஜண்ட் சரவணனே தயாரித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆனது.

ஐட்டம் சாங்கில் பிரபல நடிகை

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு பிரபல நடிகை குத்தாட்டம் போட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அஜித்துடன் மங்காத்தா, லாரன்ஸுடன் காஞ்சனா போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமி, தி லெஜண்ட் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இதற்கான ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாம்.

இதையும் படியுங்கள்... Pichaikkaran 2 : யார் அந்த பிகிலி? விஜய் ஆண்டனி சஸ்பென்சாக வச்சிருந்த விஷயம் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி

Latest Videos

click me!