பீஸ்ட் ஆடியோ லாஞ்சுக்கு போட்டியாக ‘RRR’ படக்குழு ஏற்பாடு செய்த பிரம்மாண்ட விழா - மாஸ் காட்டப்போவது யார்?

First Published | Mar 13, 2022, 5:45 PM IST

Beast vs RRR : பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 20-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு போட்டியாக ஆர்.ஆர்.ஆர் படக்குழுவும் ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்த உள்ளதாம்.

விஜய் - நெல்சன் கூட்டணி

நடிகர் விஜய்யின் 65-வது படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் செல்வராகவன், ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏப்ரலில் ரிலீஸ்

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தமாதம் திரைக்கு வர உள்ளது. இதனிடையே பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மார்ச் 20-ந் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tap to resize

5 மொழிகளில் ஆர்.ஆர்.ஆர்

இந்நிலையில், அந்த விழாவுக்கு போட்டியாக ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவும் ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்த உள்ளதாம். ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் இணைந்து நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படம் வருகிற மார்ச் 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

துபாயில் விழா

இதற்காக பிரம்மாண்ட புரமோஷன் விழாவை துபாயில் நடத்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு நடத்த திட்டமிட்டுள்ளதாம். துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவில் அந்த விழாவை நடத்த உள்ளார்களாம். இதில் அப்படத்தின் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை ஒலிவியாவும் கலந்துகொள்ள உள்ளாராம். இதற்காக கோடிக்கணக்கில் படக்குழு செலவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் சமயத்தில் தான் அந்த விழாவையும் நடத்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இருவரில் யார் மாஸ் காட்டப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதையும் படியுங்கள்... D Imman : 2-வது திருமணத்துக்கு ரெடி... ஆனா ஒரு கண்டிஷன்! - மறுமணம் குறித்து மனம் திறந்த டி.இமான்

Latest Videos

click me!