D Imman : 2-வது திருமணத்துக்கு ரெடி... ஆனா ஒரு கண்டிஷன்! - மறுமணம் குறித்து மனம் திறந்த டி.இமான்

First Published | Mar 13, 2022, 3:54 PM IST

D Imman : இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவர் சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணை மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வந்தது. 

திருமண வாழ்க்கை முறிவு

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இத்தம்பதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

2-வது திருமணத்துக்கு ரெடி

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவர் சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணை மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த அவர் தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

Tap to resize

விவாகரத்து குறித்து...

அவர் கூறியதாவது: “என்னுடைய முதல் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று தான். எனக்கு திருமணமான ஒரே மாதத்தில் என் அம்மா இறந்துவிட்டார். தான் செய்து வைத்த திருமணம் இப்படி விவாகரத்தில் முடிந்துவிட்டதே என என் தந்தையும் கவலையில் இருக்கிறார். விவாகரத்து என்பது விரும்பி ஏற்பதல்ல, அது திணிக்கப்படும் ஒரு விஷயம்.

எப்படிப்பட்ட பெண் வேண்டும்

நான் இன்னொரு திருமணம் செய்தாலும், அது அரேஜ் மேரேஜாக தான் இருக்கும். இனி எனக்கு மனைவியாக வருபவர் எனது பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாக இருக்க வேண்டும். குறிப்பாக திருமணமாகாத பெண்ணை பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். விதவை அல்லது விவாகரத்தான பெண்ணை தான் பார்க்க சொல்லி இருக்கிறேன்.

ஒரு கண்டிஷன்

அதுவும் குறிப்பாக சின்ன வயதில் பெண் குழந்தை இருக்கும் படியான வரனை பார்க்க சொன்னேன். ஏனெனில் எனது மகள்கள் ஒருவருக்கு 11வயதும், மற்றொருவருக்கு 9 வயதும் ஆகிறது. அவர்களுக்கு ஒரு குட்டி தங்கை ஒருவர் வந்தால் நன்றாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் பெண் குழந்தை இருக்கும் பெண்ணை பார்க்க சொன்னேன்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... விஜய்யின் தங்கை மறைவு குறித்து உருக்கமாக பேசிய எஸ்.ஏ.சி - ரசிகர்களை கண்கலங்க வைத்த வீடியோ

Latest Videos

click me!