Radhe shyam Box Office : 2 நாளில் ரூ.100 கோடி...! வசூலில் வலிமையை அடிச்சுதூக்கி முதலிடம் பிடித்தது ராதே ஷ்யாம்

Ganesh A   | Asianet News
Published : Mar 13, 2022, 02:10 PM ISTUpdated : Mar 13, 2022, 02:13 PM IST

Radhe shyam Box Office : 2022ம் ஆண்டு வெளியான படங்களில் அதிவேகமாக ரூ.100 கோடியை கடந்த படங்களின் பட்டியலில் வலிமையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ராதே ஷ்யாம். 

PREV
14
Radhe shyam Box Office : 2 நாளில் ரூ.100 கோடி...! வசூலில் வலிமையை அடிச்சுதூக்கி முதலிடம் பிடித்தது ராதே ஷ்யாம்

400 கோடி பட்ஜெட்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம். பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இப்படத்தை யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

24

5 மொழிகளில் வெளியீடு

முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக தயாராகி உள்ள இதற்கு தமன் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருக்கிறார். பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

34

முதல் நாளில் 79 கோடி வசூல்

மார்ச் 11-ந் தேதி உலகமெங்கும் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் ரூ.79 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கான வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

44

வலிமையை முந்தியது

அதன்படி இப்படம் இரண்டே நாட்களில் ரூ.119 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிவேகமாக ரூ.100 கோடியை கடந்த படங்களின் பட்டியலில் வலிமையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ராதே ஷ்யாம். வலிமை படம் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Samantha : இத்துணூண்டு டிரெஸ் இத்தனை லட்சமா..! சமந்தாவின் கவர்ச்சி ஆடை விலை தெரியுமா..?

Read more Photos on
click me!

Recommended Stories