Samantha : இத்துணூண்டு டிரெஸ் இத்தனை லட்சமா..! சமந்தாவின் கவர்ச்சி ஆடை விலை தெரியுமா..?

First Published | Mar 13, 2022, 12:36 PM IST

இந்த ஆடையை வடிவமைத்த பிரீத்தம் தான் சமந்தா, சைதன்யா விவாகரத்துக்கு காரணம் என்று முன்னர் வதந்திகள் உலா வந்தன... 

’கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ்’ என்ற சினிமா விருது வழங்கும் விழாவில் சமந்தா அணிந்து வந்த கவர்ச்சி தூக்கலான ஆடை தான் இப்போது சினிமா உலகின் லேட்ட்ஸ்ட் பரபரப்பு. பச்சை மற்றும் கருப்பு வண்ணங்கள் கலந்து இடுப்புக்கு கீழே புழுசா மறைத்தும், மற்ற இடங்கள் மறைத்தும் மறைக்காமலும் வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த ஆடை. இதன் மூலம் மீண்டும் கவர்ச்சி புயலை கிளப்பியுள்ளார் சமந்தா. ஏற்கனவே, “ஊ.. சொல்றியா மாமா” பாடலில் அவர் வீசிய கிளாமர் வலையிலிருந்தே இளசுகள் வெளிவரவில்லை. அதுக்குள்ள இதுவுமா..? என்பது போல சோஷியல் மீடியாக்களில் பற்றிக்கொண்டன இந்த புகைப்படங்கள்

’ராக்கிங் ராப் டிரெஸ்’ என்று டிசைனர்கள் அழைக்கும் இந்த ரக ஆடைகள் கழுத்துப் பகுதியில் தாராளம் காட்டி, பெண்களின் வளைவு நெளிவுகளை நன்கு எடுத்துக் காட்டும் விதத்தில் வடிவமைக்கப்படும்

Tap to resize

இந்த ஆடையை வடிவமைத்தவர் மும்பையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகேல்கர் ஆவார். இவர் தான் சமந்தாவின் பிரத்தியேக வடிவமைப்பாளர். சமந்தா மட்டுமின்றி நேஹா ஷெட்டி, ரித்து வர்மா போன்ற சினிமா பிரபலங்களுக்கும் பலருக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்

பிரபல சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, தமிழ் சினிமா கதாநாயகன் விஷ்ணு விஷால் திருமணத்துக்கு ஆடைகள் வடிவமைத்ததன் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமானார். மேலும் சமந்தாவின் அனைத்து ஃபோட்டோ ஷூட்களுக்கும் இவரே ஆடைகளின் பொறுப்பாளர்

சமந்தாவின் வடிவமைப்பாளராக மட்டும் இல்லாமல், இவர் சர்ச்சைகளின் மூலமாகவும் பிரபலம். சமந்தா - நாக சைதன்யா பிரிவின் போது, அதற்கு ப்ரீத்தம் தான் காரனம் என்று வதந்திகள் அதிகம் உலா வந்தன. ப்ரீத்தம்முடன் சமந்தா காட்டிய நெருக்கம், சைதன்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், சமந்தா தனது சகோதரி என்றும், அவரை “ஜிஜி (அக்கா)” என்றே தான் அழைப்பதாகவும் விளக்கினார் ப்ரீத்தம்

Samantha

இந்நிலையில், சமீபத்திய பரபரப்பான சமந்தாவின் கவர்ச்சி ஆடையின் விலை ரசிகர்களை வாய்பிளக்கவைத்துள்ளது. ப்ரீத்தம் வடிவமைத்த இந்த எக்ஸ்ட்ரா கிளாமர் ஆடையின் விலை 1,80,000 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. இத்துணூண்டு டிரெஸ்சுக்கு 1,80,000 ரூபாயா என்று ஆச்சர்யப்படுகின்றனர், ஆடையை வாங்க நினைத்த சமந்தா ரசிகர்கள்

இதுவே இத்தனை லட்சங்கள் என்றால், சமந்தா அணிந்த மற்ற ஃபோட்டோ ஷூட் ஆடைகளின் விலை எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போட்டு மலைத்துப் போயுள்ளனர் ரசிகர்கள்

Latest Videos

click me!