Priyanka Mohan : ஹோம்லிக்கு டாடா காட்டிவிட்டு கவர்ச்சியில் குதித்த பிரியங்கா மோகன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Mar 13, 2022, 05:01 PM IST

Priyanka Mohan : லாவண்டர் கலர் மாடர்ன் உடையில் லைட்டாக கிளாமர் காட்டி நடிகை பிரியங்கா மோகன், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

PREV
18
Priyanka Mohan : ஹோம்லிக்கு டாடா காட்டிவிட்டு கவர்ச்சியில் குதித்த பிரியங்கா மோகன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்

டோலிவுட் நடிகையான பிரியங்கா மோகன், நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது.

28

முதல் படத்திலேயே தனது அழகால் இளசுகளை சுண்டி இழுத்த பிரியங்காவுக்கு, தனது அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதன்படி தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.

38

இதுதவிர பாண்டிராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார் பிரியங்கா. அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

48

இப்படத்தில் ஆதினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா. முதல் பாதியில் துறுதுறுவென இருக்கும் இளம்பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் துணிச்சலான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார்.

58

தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பிரியங்காவும் சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

68

ரசிகர்களை கவரும் விதமாக அதில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து இளசுகளின் மனதை கொள்ளைகொண்டு வருகிறார் பிரியங்கா மோகன்.

78

அந்த வகையில் தற்போது லாவண்டர் கலர் மாடர்ன் உடையில் லைட்டாக கிளாமர் காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

88

அந்த புகைப்படங்களைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், ரோஜா பூ போல் அழகில் மிளிர்வதாக கமெண்டுகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... D Imman : 2-வது திருமணத்துக்கு ரெடி... ஆனா ஒரு கண்டிஷன்! - மறுமணம் குறித்து மனம் திறந்த டி.இமான்

Read more Photos on
click me!

Recommended Stories