விஜய் படமா வேண்டவே வேண்டாம்! ரிஜெக்ட் பண்ணிய ஐஸ்வர்யா ராய்க்கு தளபதி கொடுத்த தக் லைஃப் ரிப்ளை

Published : Sep 26, 2024, 01:59 PM IST

Aishwarya Rai vs Thalapathy Vijay : அஜித்துடன் சேர்ந்து நடித்த ஐஸ்வர்யா ராய், நடிகர் விஜய் உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை அதற்கான பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
விஜய் படமா வேண்டவே வேண்டாம்! ரிஜெக்ட் பண்ணிய ஐஸ்வர்யா ராய்க்கு தளபதி கொடுத்த தக் லைஃப் ரிப்ளை
Aishwarya Rai, Vijay

உலக அழகி பட்டம் பெற்ற பின்னர் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். இவர் முதன்முதலில் நடித்த படம் இருவர். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இப்படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா. இப்படம் அவருக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

25
Aishwarya Rai, Vijay, Ajith

பின்னர் ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். இப்படமும் ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க திட்டமிட்டு, அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறார்கள் ஆனால், அவர் விஜய் உடன் நடிக்கவே மாட்டேன் என சொல்லி அந்த வாய்ப்பை நிராகரித்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... வேள்பாரியில் இருந்து விலகிவிட்டாரா யஷ்? 2 டாப் கோலிவுட் ஹீரோக்களுக்கு வலைவீசும் ஷங்கர்!

35
Tamizhan Movie

இதன்மூலம் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என்கிற விஜய்யின் ஆசை தவிடுபொடி ஆனது. விஜய்யுடன் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்தது ஏன் என்பது பற்றி பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். தமிழன் படத்துக்காக ஐஸ்வர்யா ராயிடம் படக்குழு அணுகியபோது, விஜய், சின்ன பையன் என்றும் அவருக்கு தனக்கும் ஜோடி பொறுத்தம் இருக்காது எனவும் கூறி நடிக்க மறுத்துவிட்டாராம். அஜித் மாதிரி ஹீரோக்கள் எனக்கு பொறுத்தமாக இருப்பார்கள் என்று சொன்னாராம்.

45
Vijay, Priyanka Chopra

இதை விஜய்யிடம் சொன்னால் அவர் டென்ஷன் ஆகிவிடுவார் என்பதை கருத்தில் கொண்டு அவரிடம் கால்ஷீட் இல்லை என சொல்லி சமாளித்திருக்கிறார் தயாரிப்பாளர். பின்னர் இந்த உலக அழகி இல்லேனா என்ன வேறு உலக அழகியை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவெடுத்து, 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ராவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளனர்.

55
Aishwarya Rai Rejected Thalapathy Vijay Movie

நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தின் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்திற்கு பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என அவரது ரேஞ்சே வேறலெவலுக்கு சென்றுவிட்டது. பின்னாளில் விஜய்க்கு ஐஸ்வர்யா ராய் தன்னை ரிஜெக்ட் செய்த விஷயம் தெரியவந்ததும், மற்றொரு படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பையும் விஜய் தவித்து அவருக்கு தரமான பதிலடி கொடுத்தாராம்.

இதையும் படியுங்கள்... கமல் இடத்தை நிரப்ப போகும் விஜய் சேதுபதியை அன்றே கணித்த ரஜினிகாந்த்!

Read more Photos on
click me!

Recommended Stories