பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன் நேற்று தன்னுடைய 10 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
ஆராத்யா நவம்பர் 16, 2011 அன்று மும்பையில் பிறந்தார். இவரது இந்த வருட பிறந்தநாளை மேலும் சிறப்பாக்கும் விதமாக ஆராத்யா தனது பிறந்தநாளை மாலத்தீவில் பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களில் ஆராத்யா நன்கு வளர்ந்து, அப்படியே தன்னுடைய அம்மா ஐஸ்வர்யா ராய் போலவே அழகில் ஜொலிக்கிறார். பேபி பிங்க் நிற கவுனை அணிந்து கொண்டு, தன்னுடைய கியூட்டான பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன் ஆராத்யா தன்னுடைய பெற்றோருடன் போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் பிறந்தநாளில் பெரிய சாக்லேட் கேக் ஒன்றையும் வெட்டியுள்ளார். இதுகுறித்த மூன்று புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகள் குறித்து அழகி பதிவு ஒன்றையும் போட்டுள்ளனர் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் நட்சத்திர தம்பதி.
மகள் குறித்து ஐஸ்வர்யா ராய் போட்டுள்ள பதிவில், " என் தேவதை ஆராத்யாவுக்கு 10 வயதாகிறது. என் மூச்சு காற்று போன்றவள் நீ. ஆராத்யா நீ தான் எங்கள் உயிர்... நான் உன்னை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதே போல் அபிஷேக் பச்சனும் - பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளவரசி! உன் தாய் சொல்வது போல் - நீ எங்கள் உலகத்தை சிறந்த இடமாக மாற்றுகிறாய். நாங்கள் உன்னை அதிகம் நேசிக்கிறோம், கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும் என பதிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.