Aishwarya rai bachchan : அந்தரங்க கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்த ‘நச்’ பதில்

Published : Aug 06, 2022, 12:33 PM IST

Aishwarya rai bachchan : நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தாம்பத்யம் குறித்த கேள்விக்கு அளித்துள்ள நச் பதில் வைரலாகி வருகிறது. 

PREV
15
Aishwarya rai bachchan : அந்தரங்க கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்த ‘நச்’ பதில்

உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், கடந்த 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ஐஸ்வர்யா ராய்.

25

இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்த நடிகை ஐஸ்வர்யா ராய், இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

35

கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Dhanush : மீண்டும் ஹாலிவுட்டுக்கு செல்லும் தனுஷ்... ‘தி கிரே மேன் 2’-வில் நடிப்பதை உறுதி செய்தார்

45

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தாம்பத்யம் குறித்த கேள்விக்கு அளித்துள்ள நச் பதில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது : “கணவன், மனைவி இருவருக்கும் உள்ளமும், உணர்ச்சியும் ஒறுசேர வரவேண்டும், அப்போதுதான் அது அவர்களுக்கு இன்பத்தையும், நிம்மதியையும் தரும். இல்லையெனில் அது காமத்துக்காக செய்யப்படும் ஒரு செயலாக மட்டுமே தோன்றும்.

55

கடமைக்காக எதையும் செய்யாமல், மனதார உறவில் ஈடுபட வேண்டும். நானும், என் கணவர் அபிஷேக்கும் நிம்மதியாக இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் என்னால் அவரும், அவரால் நானும் சந்தோஷமாக இருக்கிறேன். இதுதான் எங்கள் தாம்பத்யம்” என அந்தரங்க கேள்விக்கு அவர் அளித்த அல்டிமேட் பதில் லைக்குகளை அள்ளுகிறது.

இதையும் படியுங்கள்... சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!

Read more Photos on
click me!

Recommended Stories