நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர்கள் இருவருக்கிடையேயான வயது வித்தியாசம் பற்றி பார்க்கலாம்.
கோலிவுட்டில் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது சகஜம் தான். ஏற்கனவே அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, ஆதி - நிக்கி கல்ராணி, ஆர்யா - சாயிஷா என பலர் இதுபோன்று காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள ஜோடி தான் விஷால் - சாய் தன்ஷிகா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சென்னையில் நடைபெற்ற பட விழா ஒன்றில் ஜோடியாக கலந்துகொண்டு தங்கள் காதலை உறுதிசெய்தனர்.
24
யார் இந்த சாய் தன்ஷிகா?
நடிகை சாய் தன்ஷிகா தஞ்சாவூரை சேர்ந்தவர். இவர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பேராண்மை படத்தின் மூலம் பிரபலம் ஆனார். இதையடுத்து அருண் விஜய் ஜோடியாக மாஞ்சா வேலு படத்தில் நடித்த சாய் தன்ஷிகா, வசந்த பாலன் இயக்கிய அரவாண், பாலாவின் பரதேசி போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பால் கவனம் ஈர்த்தார். குறிப்பாக இவருக்கு திருப்புமுனை தந்த படம் கபாலி. பா.இரஞ்சித் இயக்கிய இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்து அசத்தினார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
34
விஷால் - சாய் தன்ஷிகா காதல்
நடிகர் விஷாலும், சாய் தன்ஷிகாவும் 15 ஆண்டுகால நண்பர்களாம். இருவரும் கடந்த ஒரு மாதமாக தான் காதலித்து வருகிறார்கள். சென்னையில் நேற்று நடைபெற்ற யோகிடா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் விழாவில் விஷாலும், சாய் தன்ஷிகாவும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது தங்கள் காதலை உறுதிப்படுத்திய கையோடு திருமண தேதியையும் அறிவித்தனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி நடிகர் விஷாலின் பிறந்தநாளன்று அவரை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார் சாய் தன்ஷிகா. இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
விஷால் நடிகர் சங்க கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற முடிவில் தீர்க்கமாக இருந்தார். அவர் கூறியபடியே இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்க திறப்பு விழா நடைபெற உள்ளது. அது முடிந்த கையோடு விஷால் திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகர் விஷாலுக்கு தற்போது 47 வயது ஆகிறது. ஆனால் அவர் காதலியான நடிகை சாய் தன்ஷிகா அவரை விட 12 வயது இளையவராம். தற்போது சாய் தன்ஷிகாவுக்கு 35 வயது ஆகிறது.