பகவந்த் கேசரி பட ரீமேக் உரிமையை ஜனநாயகன் படக்குழு வாங்கியது ஏன்? ஒருவழியாக வெளிவந்த உண்மை

Published : May 19, 2025, 03:11 PM IST

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரியின் ரீமேக்கா? இல்லையா? என்பது பற்றிய முக்கிய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
Jana Nayagan is a Remake of Bhagavanth Kesari or Not?

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். வெங்கட் கே நாராயணன் தனது கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

24
ஜனநாயகன், பகவந்த் கேசரி ரீமேக்கா?

ஜனநாயகன் படம் தொடங்கப்பட்டதில் இருந்தே இது பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி பட ரீமேக் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லையாம். அப்படத்தின் ஒரு காட்சியை மட்டும் ஜனநாயகனில் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட காட்சிக்காக தான் அப்படத்தின் ஒட்டுமொத்த ரீமேக் உரிமையையும் 4.5 கோடி ரூபாய்க்கு ஜனநாயகன் படக்குழுவினர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

34
ஜனநாயகனில் பகவந்த் கேசரி பட காட்சி

நடிகர் விஜய், பகவந்த் கேசரி படத்தைப் பார்த்தபோது, அதில் வரும் 'குட் டச் பேட் டச்' காட்சி அவரை மிகவும் கவர்ந்ததாம். இதனால் அதை ஜனநாயகனில் சேர்க்க விருப்பம் தெரிவித்தாராம். நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரீலீலா நடித்த அந்தக் காட்சி, ஜனநாயகனிலும் இடம்பெற உள்ளது. இந்த ஒரே ஒரு காட்சியை தவிர பகவந்த் கேசரிக்கும் ஜனநாயகனுக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்

ஜனநாயகன் திரைப்படம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் 'தளபதி வெற்றி கொண்டான்' என்ற பெயரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூரியன் மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியாளராக அனில் அரசு பணியாற்றியுள்ள இப்படத்தில் கலை இயக்குனராக வி. செல்வகுமார் பணியாற்றி இருக்கிறார். ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படம் 1000 கோடி வசூலை அள்ளுமா என்கிற எதிர்பார்ப்பும் திரையுலகினர் மத்தியில் நிலவி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories